காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்சவிழா தெப்ப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 11:03
காரைக்கால்; காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத் தையொட்டி நேற்று தெப்ப திருவிழா நடந்தது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 15ம் தேதி பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து கொடியேற்றத்துடன் துவங்கியது.பின் தினம் விநாயகர்,சுப்ரமணியர், கலாசநாதர், சுந்தாம்பாள், சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் வீதியுலா நடந்தது. விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலம், கயிலாசநாதர் சூரிய பிரபை, சுந்தராம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும்,சண்டிகேஸ்வரர் ரிஷப வாகன வீதி உலா நடைபெற்றது. கடந்த 23ம் தேதி மிக விமர்சியாக தேர் திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு தெப்பதிருவிழா நடந்தது. இதில் சுந்தராம்பாள் சமேதராக கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனிஅதிகாரி காளிதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.