பதிவு செய்த நாள்
27
மார்
2024
11:03
தொண்டாமுத்தூர்; பேரூரில் உள்ள மஹா பெரியவா கோவிலில், உலக நலன் வேண்டி, ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காஞ்சி மஹா பெரியவருக்கென, பேரூரில் கோவில் நிர்மானிக்கப்பட்டு, நித்யப்படி பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, உலக நலன் வேண்டி, மஹா பெரியவா கோவிலில், ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேரூர் மஹா பெரியவா கோவிலின் ஒருங்கிணைப்பாளர் சாமவேத ஷ்ரவுதிகள் லக்ஷ்மன் கூறுகையில்,"பேரூர் மஹா பெரியவா ஆலயத்தில், ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சங்களை வைத்து, லோகத்தின் நலனுக்காக சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இதற்காக, ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஷர்மா சந்திரமவுளி குருசாமி என்பவர், ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சங்களை வழங்கினார்,"என்றார்.