சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பங்குனி சுவாதிப் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா மார்ச் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, தினமும் காலை, இரவில் வெவ்வேறு வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுதேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. இன்று 28 ம்தேதிகாலை 10.35 மணியளவில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கோயில் தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.