Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழவந்தாள் அம்மன் கோயிலில் பங்குனி ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் பக்தர் அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயராகிறது திருமலை!
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் பக்தர் அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயராகிறது திருமலை!

பதிவு செய்த நாள்

02 ஏப்
2024
12:04

அன்னமாச்சார்யா இசை மேதை, ஏழுமலையான் பக்தர். தென்னிந்திய இசையில் ஏராளமான மரபுகளைத் தோற்றுவித்தவர்,32,000 கீர்த்தனைகளை இயற்றியவர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் கிராமத்தில் (1408) பிறந்தவர்.  தென்னிந்திய இசையில் ஏராள மான மரபுகளைத் தோற்றுவித்தார். பஜனை மரபைத் தொகுத்து வழங்கிய சிறப்பு பெற்றவர். பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் இவரால்தான் உருவாக்கப்பட்டது. ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இவரது பல கீர்த்தனைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. ராமானுஜர் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.  சாதி ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தார். ‘இறைவன் ஒருவனே. அவன் பாரபட்சம் இல்லாதவன். சாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்று எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு’ என்று தனது ‘பிரம்மம் ஒக்கடே’ பாடலில் சொல்கிறார்.  தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் ஏராளமான பாடல்களை இயற்றினார். சிலமுறை கேட்டாலே புரியும் வகையில் எளிமையாக, தெளிவாக இருப்பது அவற்றின் சிறப்பம்சம். இவரது ராம பக்திப் பாடல்கள் பிரசித்தி பெற்றவை. ‘பதங்கள் அடங்கிய கவிதையின் பிதாமகர்’ எனப் புகழப்பட்டார். தனது காலத்துக்கு முன்பு இருந்த பாடல்களை ஆராய்ந்து பாட உரை வரிசை எழுதியுள்ளார்.

சமஸ்கிருதத்தில் ‘சங்கீர்த்த லட்சணம்’, ‘வெங்கடாசலபதி மஹிமா’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்கள் கொண்டது) படைத்துள்ளார். இதில் ‘வெங்கடேஸ்வர சதகம்’ என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் படைத்த ‘த்விபர்த ராமாயணா’, ‘ஸ்ருங்கார மஞ்சரி’ ஆகியவை தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய நூல்களாகப் போற்றப்படுகின்றன. தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரும் பிரபலமான ‘சுபத்ரா கல்யாணம்’ என்ற நூலை எழுதியவருமான திம்மக்கா இவரது மனைவி. இவர்களது மகன் திருமாலாச்சாரியார், பேரன் சின்னய்யா ஆகியோரும்கூட, தென்னிந்திய சங்கீத வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘அன்னமய்யா’ என்ற தெலுங்கு திரைப்படம் 1997-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பல தெலுங்கு திரைப்படங்களில் இவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  தென்னிந்திய சங்கீத பாரம்பரியத்தின் முக்கிய சின்னமாகப் போற்றப்படுபவரும், கவிஞர், அறிஞர், ஆச்சார்யா, அன்னமய்யா என்றெல்லாம் போற்றப்படுபவருமான அன்னமாச்சார்யா 95-வது வயதில் (1503) மறைந்தார். அவரது 521 வது பிறந்த நாள்  திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. காலை 6 மணி முதல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் மற்றும் பஜனை மண்டல கலைஞர்கள் அன்னமாச்சாரியாரின் "சப்தகிரி சங்கீர்த்தன கோஸ்திகானம்" நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அதன்பின், மெட்லபூஜை நடைபெறும். பின் சங்கீர்த்தனம் பாடியபடி  கால் நடையாக திருமலை ஏறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள பஜனை மண்டல கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.திருமலையில் உள்ள நாராயணகிரி கார்டனில் ஏப்., 5ல் கோஷ்டிகானம் மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ஏப்ரல் 6 முதல் 8 வரை மூன்று நாட்களுக்கு திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரம், தல்லாபாகாவில் உள்ள தியானமந்திரம் ஆகிய இடங்களில் இலக்கிய கருத்தரங்குகளும், அவரின்  சொந்த ஊரில் பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
ஏப்ரல் 6 முதல் 8 வரை மூன்று நாட்களுக்கு திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரம், தல்லாபாகாவில் உள்ள தியானமந்திரம் ஆகிய இடங்களில் இலக்கிய கருத்தரங்குகளும், துறவி கவிஞரின் சொந்த ஊரான 108 அடி அன்னமய்யா சிலையில் ஆன்மீகம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். -–எல்.முருகராஜ்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar