நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2024 10:04
பாலக்காடு; நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற நெம்மாரா பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் வேலா என்ற பெயரில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. காலை "பள்ளிவாள் கடயல் நிகழ்ச்சியுடன் கோவிலில் ஆச்சார சடங்குகள் ஆரம்பித்து. 5 க்கு கணபதி ஹோமம், "வரியோலை வாசிப்பு, நெல் பறை எடுப்பு ஆகியவை நடந்தன.10 க்கு பகவதி அம்மனுக்கு அபிஷேகவும் சிறப்பு பூஜையும் நடந்தது. 11 மணிக்கு சோற்றானிக்கரை விஜயன் மாரார் தலைமையில் 50 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு உள்ள பஞ்ச வாத்தியம் முழங்க யானைகள் அணிவகுப்பில் அம்மன் எழுந்தருளி தெரு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 4.30 மணிக்கு கலாமண்டலம் சிவதாசனின் தலைமையில் 50க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட "பாண்டி மேளம் என்று அழைக்கும் செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்து மணி குடைகள் சூடிய 9 யானைகள் கோவில் வாசல் முன் அணிவகுத்து நின்று "குடை மாற்றம் நிகழ்வு நடந்தன. இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர். மாலை 6.30 மணிக்கு விழாவின் சிறப்பு அம்சமான பிரமாண்ட வான வேடிக்கை நடந்தது. இதேபோல் இன்று அதிகாலை 3 மணிக்கும் பிரமாண்ட வானவேடிக்கை நடந்தன. இந்த வான வேடிக்கையை காண மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர். விழாவை ஒட்டி பகுதியில் போலீஸ் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தி இருந்தன. கோவிலில் இன்று காலை நடக்கும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து விழா நிறைவடைந்தது.