ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் அபிராமி அந்தாதி பாராயணம், நவ சண்டி யாக வேள்வி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2024 10:04
அவிநாசி; திருமுருகன் பூண்டி, அம்மாபாளையத்தில் ஜெகன் மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி பாராயணம் மற்றும் நவசண்டி யாக வேள்வி பூஜை நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் எழுந்தருளியுள்ள ஜெகன் மாதா ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ராஜா மாதங்கி அம்பாள், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷ்ன பைரவர் கோவிலில் வரும் செப்டம்பர் 14, 15ம் தேதிகளில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்காக நேற்று காலை கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ சாரதா சத்சங்கம் ஸ்ரீ மஹாத்மானந்தா சரஸ்வதி தலைமையில் லலிதா சகஸ்ரநாமம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம் செய்யும் நிகழ்ச்சி 108 சிஷ்யைகள் பங்கேற்று நடத்தினர். அதன் பிறகு முதல் கால நவசண்டி யாகம் நடைபெற்றது. இதனை டாக்டர் சிவாகம கலாநிதி ஸ்ரீ சபேஷ் சிவாச்சாரியார் நடத்தினார். அதனைத் தொடர்ந்து பூர்ணாஹீதி, மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இன்று இரண்டாம் கால நவசண்டி யாக வேள்வியும் நண்பகலில் மஹா பூர்ணாஹீதியை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.