பழநி கோயில் செல்லும் கிரி வீதியில் நிழல் பந்தல்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2024 10:04
பழநி; பழநி, கோயில் செல்லும் வழியில் கிரிவீதியில் நிழல் பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழநி வரும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியே படிப்பாதை, யானை பாதையை அடைந்து மலைக்கோயில் செல்கின்றனர். பாத விநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை பக்தர்கள் வரும் கிரிவீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், மிகவும் சிரமம் அடைகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தற்காலிகமாக சாமியான பந்தல் அமைக்கப்பட்டது. பங்குனி உத்திர தேரோட்டம் கிரி வீதியில் நடைபெற்றது. அப்போது தற்காலிக நிழற் பந்தல்கள் அகற்றப்பட்டன. தற்போது வடக்கு கிரி வீதி பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் தகர சீட்டுகள் கொண்டு நிழல் பந்தல்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கம் குறையும் வரை தற்போது அமைக்கப்படும் நிழல் பந்தல்கள் தொடர்ந்து இருக்க கோரிக்கை எழுந்துள்ளது.