அயோத்தி ராமர் கோயிலில் அஷ்டமி தரிசனம்; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2024 10:04
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் அஷ்டமி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்த தினம் முதல் தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசித்து வருகின்றனர். நேற்று அஷ்டமியை முன்னிட்டு ஏராளமானோர் அதிகாலை முதல் தரிசனம் செய்தனர். அஷ்டமி தினமான நேற்று அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு, ஆரத்தி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாலராமரின் தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். இன்று அதிகாலை முதல் ராமரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஸ்ரீ ராம் லல்லாவை அமைதியாக நீ்ண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.