கூடலூர்; மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோயில், நடுக்கடலூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் நிறைவுவிழா சிறப்பாக நடந்தது.
மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோயில், நடுகூடலூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பிப்., 15ல் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து. இதன் நிறைவு விழா பூஜைகள் இன்று சிறப்பாக நடந்தது. காலை 9:00 மணிக்கு மாரியம்மன் கோவிலும், நடுகூடலூர் விநாயகர் கோவிலிலும் சங்காபிஷேகம் பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.