பதிவு செய்த நாள்
04
ஏப்
2024
12:04
கொல்லங்கோடு; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு தூக்க நேர்ச்சைக்காக பெயர் பதிவு செய்த குழந்தைகளுக்கான குலுக்கல் இன்று (4ம் தேதி) நடக்கிறது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இந்த ஆண்டைய தூக்கத் திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடக்கும் விழாவில், வரும் 10ம் தேதி குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடக்கிறது. இக்கோவிலில் , கடந்த ஆண்டு 1326 குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நிறைவேற்றப் பட்ட நிலையில், இந்த ஆண்டு தூக்க நேர்ச்சைக்காக நேற்று மாலை 6 மணி வரை 1365 குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 4ம் நாள் இன்று காலை 8.30 மணிக்கு தூக்கநேர்ச்சை குலுக்கல் துவங்குகிறது. இருப்பினும் மாலை வரை நேர்ச்சைக்காக பெயர் பதிவு செய்யலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தூக்க நேர்ச்சைக்காக பெயர் பதிவு செய்யும் பச்சிளம் குழந்தைகளுடன் தூக்க ரத வில்லில் ஏறும் தூக்கக்கார்களின் உடல்திறனை கண்டறியும் மருத்துவ பரிசோதனை நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய மருத்துவ பரிசோதனையில், சிறப் பு மருத்துவ குழுவினர் தூக்கக்காரர்களின் உடல் திறனை பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் வழங்கினர். இதில், தேர்வான தூக்கக்கார்கள் இன்று முதல் தூக்க நேர்ச்சை நடக்கும் வரை கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்து நமஸ்கார ம் செய்து விரதம் இருப்பர். இன்று தூக்க நேர்ச்சையின் குலுக்கல் மற்றும் காப்புகட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், நேர்ச்சை குழந்தைகள் மற்றும் தூக்கக்கார்கள் வரிசைப்படுத்தப்படுவர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோக ன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணைத் தலைவர் சசிகுமாரன் நாயர், இணைச்செயலாளர் பிஜூகுமார், உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் உட்பட கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.