சிந்துபட்டி வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2024 05:04
திருமங்கலம்; திருமங்கலம் அருகே சிந்துபட்டியில் தென் திருப்பதி என அழைக்கப்படும் 400 ஆண்டுகள் பழமையான வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருமங்கலம் அருகே சிந்துபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. பெண் திருப்பதி என அழைக்கப்படும் இங்கு திருப்பதிக்கு வேண்டிய நேர்த்திக்கடன்களை இங்கு செலுத்தி நிறைவேற்றலாம். கடந்த ஏப்., 1ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இன்று காலை 5 கால யாக காலை பூஜைகள் முடிவடைந்தன. இவையெடுத்து யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 10:30 மணிக்கு கபுனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர். கும்பாபிஷேகத்தின் போது கருடன் வானில் கோபுரத்திற்கு மேல் வட்டமடித்தபடி இருந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.