பதிவு செய்த நாள்
06
ஏப்
2024
11:04
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக, 2 கோடியே, 55 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், நேர்த்திக் கடனாக உண்டியல் காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று, கோவிலில் இருந்த பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள், 2 கோடியே, 55 லட்சத்து, 2,820 ரூபாய், 265 கிராம் தங்கம், 2,320 கிராம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.