அதிகரிக்கும் வெயில் : குருவாயூர் தேவஸ்தானத்தில் பறவைகளுக்கு குடிநீர் அளிக்கும் திட்டம் அறிமுகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 11:04
பாலக்காடு; கோடை கால வெயிலில் ஒரு சொட்டு தண்ணீரை தேடி அலையும் பறவைகளுக்கு குடிநீர் அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது குருவாயூர் தேவஸ்தானம்.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இக்கோவில் தேவஸ்தானம் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குடிநீர் தேடி அலையும் பறவைகளுக்கு குடிநீர் அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக குருவாயூர் கோவிலிலும் சுற்றுப்பகுதிகளிலும் புன்னத்தூர் யானைகள் பராமரிப்பு மையத்திலும் தேவஸ்தான விடுதிகளிலும் பறவைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தாகம் தீர்க்க மண் பானைகளில் தண்ணீர் அமைக்கப்படும். இதற்குத் தேவையான 1001 மண் பானைகள் ஆலுவாவை சேர்ந்த பக்தர் ஸ்ரீமத் நாராயணன் குருவாயூர் கோவிலுக்கு நேற்று நன்கொடையாக சமர்ப்பித்தனர். கோவில் கிழக்கு கோபுர நடை முன் நடந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக தலைவர் விஜயன் மண் பானைகள் பெற்றுக் கொண்டார். நிர்வாக குழு உறுப்பினர்கள் மனோஜ், கோபிநாத், ரவீந்திரன், விஸ்வநாதன், நிர்வாகி வினயன், விஸ்வநாதன் ஆகியோர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.