அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சி கோவிலுரரில் உச்சிமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து புனித தீர்த்த குடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்மன், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஏப்.,9) கிராமத்தினர் பால் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம மரியாதைக்காரர்கள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.