தெலுங்கு வருட பிறப்பு ; தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 12:04
சென்னை: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சென்னை, தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில், உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில், சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. விழாவில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், ஆரத்தி நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்ககள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.