Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. ... மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு 2024 - 2025 மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு 2024 - 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
மீனம் : தமிழ்ப்புத்தாண்டு பலன் ..வாழ்க்கைத் தரம் மேம்படும்
எழுத்தின் அளவு:
மீனம் : தமிழ்ப்புத்தாண்டு பலன் ..வாழ்க்கைத் தரம் மேம்படும்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
07:04

பூரட்டாதி: எல்லோரையும் பற்றிய விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே! உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாறுவார்களேயன்றி, நீங்கள் எதிலும் ஏமாற மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தைப் போலவே உடைகளும் துாய்மையாக இருக்க வேண்டுமென விரும்புபவர் நீங்கள்.
இந்த வருடம் சிலருக்கு புதிய வீட்டுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவிகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சிறப்பாகவே தொடரும். சேமிப்பு பன்மடங்கு கூடும்

தொழில், வியாபாரத்தில் மனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும். இருப்பினும் வியாபார தலத்தில் உங்களின் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் கவனம் இருப்பது நல்லது.  இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவசியம்.

பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வை எளிதாகப் பெற்று மகிழ்வார்கள். அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். பணியிடத்தில் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வருமானத்தின் காரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம். முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்கக் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக்கூடிய வாய்ப்புண்டு.  

அரசியல்வாதிகள் தன்னலமற்ற  உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.  உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். இதன் காரணமாக பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும்.  தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். மனஉறுதியுடன் குறிக்கோளை நோக்கி பயணிப்பது  உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

பெண்களுக்கு வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்த தம்பதியர் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும்.  திருமணம் தள்ளிப்போய் வந்த கன்னியருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும்.  சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்புண்டு.  குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறைமுகச் சேமிப்புகளால் மனநிறைவு காண்பீர்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள், நடனம், இசை போன்ற பிற துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை உண்டு. அரசு வழங்கும் கல்விச் சலுகைகளைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.  நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.
பரிகாரம்: நவகிரக குருவை வணங்க வாழ்க்கை நிலை உயரும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ:


உத்திரட்டாதி: வாழ்க்கைத் தரம் மேம்படும்

கம்பீரமான தோற்றத்தையும், பரந்த மனப்பான்மையும் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே! உங்கள் உள்ளம் உறுதி வாய்ந்தது. எப்போதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். சோர்ந்திருப்பது உங்களுக்குப் பிடிக்காது. செய்வன திருந்தச் செய் என்பதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளில் யாராவது குறை கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு எதையுமே சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து முடித்து பலருடைய பாராட்டுகளைப் பெறக் கூடியவர்கள் நீங்கள். மனம் வருந்தி மற்றவர்களை பழித்து பேசினால் அது அப்படியே பலித்துவிடும் என்பதால் நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். அந்தஸ்து மிக்க நல்ல மனிதர்கள், பெரியோர்களின் தொடர்பால் உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுப்பீர்கள். மறைமுகக் கலைகளான ஆசனம், ஆழ்மனத் தியானம் போன்றவற்றை கற்றுக் தேர்ந்து அடுத்தவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள். சகோதர, சகோதரிகளின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள், மேலும் முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்துவிடுவீர்கள்.

தொழில், வியாபாரிகளுக்கு கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் அமைதிக்கும், மனநிம்மதிக்கும் குறைவிராது. வியாபாரம் லாபகரமாகவே நடைபெறும்.   வாடிக்கையாளர்களின் தேவையறிந்து நிறைவேற்றவும், அவர்களின் நன்மதிப்பைப் பெறவும் முயற்சிப்பது அவசியம். அதே நேரத்தில்  அவர்களை ஈர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை பின்பற்றுவது வியாபாரத்தை பெருக்க உதவும். தொழில்ரீதியான பயணங்களால் வருமானத்தை அதிகரிக்கச் செய்வீர்கள். தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.  
 
பணியாளர்களுக்கு  உயரதிகாரிகளின் ஆதரவு உறுதுணையாக இருக்கும். நிர்வாகத்தினரின் நல்லெண்ணத்தால் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பணிமாறுதல், இடமாறுதல் என உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். உங்கள் அன்றாடப் பணிகளில் சிறு குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவது அவசியம். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலையில் பற்றாக்குறை ஏற்பட இடமில்லை. சிக்கன நடவடிக்கை மூலம் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

கலைத்துறையினர் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பின்னணி இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வர். தொழில் ரீதியா  வெளியூர்ப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரும். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
 
அரசியல்வாதிகளுக்கு சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும்  உறுதியான மனதுடன் இருந்து பொறுமை காப்பதன் மூலம் தலைமையின் அன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தடுமாறுவது எதிர்காலத்தில் துன்பம் தரும் என்பதை உணர்வது அவசியம். உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை மட்டும் கவனத்தில் வைத்து செயல்படுவது நலம் தரும். மக்களின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். தொண்டர்களுக்காக கூடுதலாக செலவு செய்ய நேரிடும்.

பெண்களுக்கு திருமணம் திடீரென முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்பாராத நன்மைகளைப் பெற்று மகிழ்வர். உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.   வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும்.

மாணவர்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்வீர்கள். சென்ற ஆண்டு தோல்வியுற்ற பாடத் தேர்வுகளை இந்த ஆண்டு எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். சிலர் உயர்கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்புண்டு.  
பரிகாரம்: சங்குப்பூ கொண்டு சனிபகவானை வணங்க பிரச்னைகள் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், சிவப்பு
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ


ரேவதி: வெளிநாடு செல்லும் யோகம்

மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர்களான ரேவதி நட்சத்திர அன்பர்களே! நீங்கள் பார்வைக்குத் தான் சாதுவே தவிர, மற்றபடி அறிவுக்கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவர்கள்தான்.  தேவையான நேரத்தில் அவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தி பிறரை வியப்படையச் செய்வீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகித் தவிப்பதை தவிர்த்தால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிட வாய்ப்புண்டு. மற்றவர்களிடம் கை நீட்டி நின்று சேவகம் புரியும் அவசியம் இல்லாமல் பலரையும் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கும் அமைப்புடையவர்கள் நீங்கள்.  
இந்த வருடம் உழைக்கும் அவசியம் அதிகம் என்றாலும் அதற்கு பலனாக  வருமானம் அதிகரிக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும், நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். அதே நேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு தட்டி விட்டது என்றிருந்தவர்களுக்கு அது மாறி நம்பிக்கை துளிர்விடும். கல்வி, வேலைவாய்ப்புக்காக  வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் உண்டாகும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். கடினமான வேலைகளையும் சரியாக முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையான திட்டங்கள், சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் குறைந்தபட்ச லாபத்துடன் தொழிலை நடத்துவது நல்லது. வேலையாட்களின் தவறான செயல்பாடு, நடவடிக்கைகளைக் கண்காணிப்பதன் மூலம் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் கவனக் குறைவு இருப்பது கூடாது. சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் எதிர்பார்த்தபடி பணி, இடமாற்றம் கிடைக்கக் கூடுமாயினும் அதிருப்தியுடன் காணப்படுவீ்ர்கள். சிலருக்கு புதிய பணி வேலைப்பளு நிறைந்ததாக இருக்கக் கூடும். உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும் புகார் உண்டாக வாய்ப்பில்லாத நிலையிலும் பணிகளில் அக்கறையுடன் இருப்பது அவசியம்.
 
கலைத்துறையினர்  விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சக கலைஞர்களிடம் இனிமையாகப் பேசி பழகுவது நன்மையளிக்கும். இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதிக வருமானம் காண்பர். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.

அரசியல்வாதிகள் எதிலும், எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவதோடு இனிய அனுபவமும் ஏற்படும்.

பெண்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கருவுற்ற பெண்களுக்கு உடல் நலனில் அக்கறை தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர வேண்டாம். பெற்றோர், சகோதர வகையில் உதவி கிடைக்கும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.

மாணவர்கள் வீண்பொழுது போக்குகளைக் குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். வாகனப் பயணத்தின் போது கவனம் தேவை. முயற்சிக்கேற்ப தேர்வில் மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவும், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும், விளையாட்டிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர வாழ்க்கை சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 8
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ராம் க்ரோம் ஜம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar