திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் கர்நாடக துணை முதல்வர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 04:04
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனிசன்னதியில் அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலில் இன்று கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் ஹெலிகாப்டர் மூலம் வரிச்சிக்குடி பாலிடெக்னிக்கல்லூரிக்கு வருகைப்புரிந்த பின்னர் கார் மூலம் கோவிலுக்கு வந்தார். இவரை கோவில் நிர்வாகம் வரவேற்பு அளித்தனர். பின்னர் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தர்ப்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்ட அவர், உலக நன்மைவேண்டியும், காங்.,கட்சி வேட்பாளர் வெற்றிப்பெற வேண்டும் என்றும் சிறப்பு பூஜை செய்தார். கர்நாடக துணை முதல்வர் வருகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.