பதிவு செய்த நாள்
09
ஏப்
2024
04:04
பரமக்குடி; பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் ராம நவமி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் நேற்று காலை அனுக்கை, மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு ராமர் சீதை, லட்சுமணன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. அப்போது ராமர் சீதை, லட்சுமணன் வெள்ளி கவசத்தில் அருள் பாலித்தனர். இரவு 7:00 மணிக்கு வாமன அவதாரத்தில் ராமர் வீதி உலா வந்தார். தொடர்ந்து தினமும் காலை அபிஷேகமும், இரவு காளிங்க நர்த்தனம், பாண்டுரங்கன், கூடலழகர், கள்ளழகர், தவழும் கண்ணன், இரு கருட சேவை என அருள்பாலிக்க உள்ளார். ஏப்.,16 மாலை 6:00 மணிக்கு புத்திர காமேஷ்டி யாகம் நடந்து, பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் ராம ஜனனம் கோலாகலமாக நடக்க உள்ளது. ஏப்.,18 காலை 10:15 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், 11:30 மணிக்கு கோதண்டராமசாமி, சீதாலட்சுமி பிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. ஏப்.,19 தீர்த்தவாரி நடந்து இரவு கொடி இறக்கம் நடக்கிறது. மேலும் ஏப்.,20 ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு புஷ்ப கேடயத்தில் வீதி உலாவும் வருகிறார். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளையராஜா தலைமையில் செய்து உள்ளனர்.