சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 04:04
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செண்டை மேளம் முழங்க கருட உருவம் பொறித்த கொடியை சப்பரத்தில் வைத்து பக்தர்கள் ரத வீதிகளை சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. கொடிமரத்திற்கு சந்தனம், பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோயில் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தன. அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். ஏப்.,15ல் திருக்கல்யாணம், 17ல் ராமஜெனனம், தீர்த்தவாரி, ஏப்.,18ல் புஷ்பயாகம்,19ல் விடையாற்றி உற்ஸவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள், கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.