நாகமலை புதுக்கோட்டை சந்தன மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 04:04
வாடிப்பட்டி; நாகமலை புதுக்கோட்டையில் தடாதகை அம்மன், கருப்பசாமி, முத்தையா சுவாமி, அருள்பெற்ற சந்தன மாரியம்மன் கோயிலில் 27ம் ஆண்டு உற்ஸவ விழா ஏப்.,2 செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் இன்று காலை அம்மனுக்கு கரகம், பால்குடம் எடுத்தும், மாலை பொங்கல் வைத்து, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஏப்.,10) முளைப்பாரி கரைத்தல் மற்றும் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.