தெலுங்கு வருடப்பிறப்பு; காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை.. பக்தர்களுக்கு உகாதி பச்சடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 05:04
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கு வருடப் பிறப்பு உகாதியை முன்னிட்டு கோயில் பல வண்ண மலர்களாலும் கண்கள் மிளுரும் வகையில் மின் விளக்குகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையார்களுக்கு (உற்சவ மூர்த்திகளுக்கு ) சிறப்பு அபிஷேகம் நடந்தது . இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு தேவஸ்தான செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் மற்றும் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயில் வேதப் பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளை செய்ததோடு, சுவாமி அம்மையார்களுக்கு பால் தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு உகாதி பச்சடியை பிரசாதமாக வழங்கப்பட்டது. தெலுங்கு வருடப்பிறப்பை ஊட்டி கோயில் அருகில் உள்ள சிவன் கோயில் அருகில் உள்ள பக்த கண்ணப்பர் கோயிலுக்கு சிவன் கோயில் சார்பில் இன்று சீர்வரிசை பொருட்கள் (பூஜை பொருட்கள்) தேவஸ்தானம் சார்பில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் செயல் அலுவலர், கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் ஆகியோர் தலைமீது சுமந்து கொண்டு ஊர்வலமாக கோயிலில் இருந்து தேர் வீதியில் உள்ள பக்தக் கண்ணப்பர் கோயில் அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது.