எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா உற்சவம்; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 10:04
மானாமதுரை; மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் உற்சவ திருவிழாவில் ஏராளமான பொங்கல், மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர்
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான சித்திரை பொங்கல் ஏப்.2ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்குகியது.10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது போது தினமும் இரவு உற்சவர் எல்லைப்பிடாரி அம்மன் ஆனந்தவல்லி அம்மன் கோயிலிருந்து சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை விழா நேற்று நடந்ததையொட்டி மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் கோயில் பூஜாரி சிவஞானம் மானாமதுரை கஸ்பா கிராமத்தினர் செய்திருந்தனர்.