பதிவு செய்த நாள்
10
ஏப்
2024
10:04
சோழவந்தான்; சோழவந்தான் நாடார் தெரு, நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் 17ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நேற்று அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவையோட்டி ஏப்.,14ல் வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல், 15., பூச்சொரிதல் விழா, 16 காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம். 20ல் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை, சந்தனக்குடம், அபிஷேகம், ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா, 21ல் மஞ்சள் நீராட்டு விழா, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கம், மகளிர் சங்கம் மற்றும் இளைஞரணி சங்கத்தினர் செய்கின்றனர்.