பொலாலி ராஜராஜேஸ்வரி கோவில் விழா; கால்பந்து விளையாடி பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 01:04
கர்நாடகா: பொதுவாக மூலஸ்தானத்தில் அந்த தலத்திற்குரிய மூலவர் மட்டுமே அருள்பாலிப்பர். ஆனால் பொலாலி ராஜராஜேஸ்வரி கோவில் மூலவர் கருவறையில் மகாகணபதி, சரஸ்வதி, பத்ரகாளி, சுப்ரமணியர் ஆகியோர் களிமண் விக்கிரகத் திருமேனியராகக் காட்சி தருவது சிறப்பு. இங்குள்ள மூலவர் மற்றும் ஏனைய மூர்த்தங்களுக்கு, 12 வருடங்களுக்கு ஒருமுறை, எட்டு வகை மூலிகைக் கலவைகளால் மேல்பூச்சு பூசப்படுகிறது. இந்தக் கோயிலின் சிறப்புகளில், கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நடைபெறும் திருவிழாவும் ஒன்று. மார்ச் மாதத்தின் நடுவில், கொடியேற்றத்துடன் துவங்கி, 30 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது இந்தவிழா. அப்போது, 5 நாட்கள் நடைபெறும். பொலாலி செண்டு எனப்படும் பக்தர்கள் ஆடும் கால்பந்தாட்டத்தைக் காண, லட்சக் கணக்கான மக்கள் திரள்வார்கள். இந்தாண்டு விழாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கால்பந்து விளையாடினர்.