அயோத்தியில் அதிகாலை ஆரத்தி; சைத்ர நவராத்திரி மூன்றாம் நாள்.. தங்கமாய் ஜொலித்த ராமர்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 11:04
அயோத்தி: சைத்ரா நவராத்திரி என்பது ஒரு பிரமாண்டமான, புனிதமான இந்து பண்டிகையாகும், இது இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதை ராம நவராத்திரி என்று அழைக்கின்றனர். அயோத்தி ராமர் கோயிலில் சைத்ரா நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 17 வரை நடைபெறும் விழாவில் ராம் லல்லாவிற்கு சிறப்பு ஆரத்தி மற்றும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான இன்று மஞ்சள் ஆடைகள், வஸ்திரங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்கம் போல் ஜொலித்த ராமரை கண்டு பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவின் 9ம் நாள் ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக அயோத்தி நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.