சிங்கம்புணரி பத்திரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 12:04
சிங்கம்புணரி; சிங்கம்புணரி நாடார்பேட்டை பத்திரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஏப். 9ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்குப் பூச்சொரிதல் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு திருவிழா துவங்கியது. 9 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஏப். 16ல் பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்தலும் நடக்கிறது. ஏப். 17 ல் பொங்கல் வைத்தல், அம்மன் வீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாடார்கள் உறவின் முறையாளர்கள் செய்துவருகின்றனர்.