சித்திரை விஷூ பூஜைக்கு சபரிமலை நடை திறப்பு; குவிந்த பக்தர்கள்.. நெய்யபிஷேகம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 01:04
சபரிமலை, சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் சித்திரை விஷூ சிறப்பு பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை நேற்று மாலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். கோவில் தந்திரி கண்ட ரரு மகேஷ் மோகனரு முக்கிய பூஜைகளை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கணபதி, நாகர், மாளிக புறம் சன்னதிகள் திறக்கப்பட்டன. 11ம் தேதியான இன்று காலை முதல் நெய்யபிஷேகம் துவங்கி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சரணகோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். சித்திரை 1ம் தேதியான வரும் 14ம் தேதி அதி காலை 3 மணிக்கு சபரிமலை திரு நடைதிறக்கப்பட்டு விஷூ கனி தரிசனம் மற்றும் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விஷூ தின சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வரும் 18ம் தேதி இரவு நடை சாத்தப்படுகிறது.