Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம் புத்தூர் திருபுராய்க்கல் பகவதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்; ஏப்.,21ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்; ஏப்.,21ல் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2024
04:04

பரமக்குடி; பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பரமக்குடி பெரிய பஜார் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மதுரை சித்திரை திருவிழாவுக்கு இணையாக விழா நடப்பது வழக்கம். இதன்படி இன்று காலை 10:00 மணிக்கு சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் நந்தி கொடியை ஏற்றினர். பின்னர் மாலை பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி வலம் வந்தனர். தினமும் சுவாமி அம்மன் தனித்தனியாக கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, குதிரை, கைலாச, காமதேனு, ரிஷபம், நந்திகேஸ்வரர், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருவர். ஏப்.,18 காலை நடராஜர் புறப்பாடு, மறுநாள் பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளுவார். ஏப்.,20 இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,21 மாலை 5:00 மணிக்கு மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. அன்று இரவு யானை மற்றும் பூ பல்லக்கில் பட்டண பிரவேசம் நடக்கும். மறுநாள் காலை 9.30 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் விமரிசையாக நடக்க உள்ளது. ஏப்.,23 கொடி இறக்கமும், மறுநாள் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பரம்பரை டிரஷ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar