கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில் லட்சதீப பெருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2024 11:04
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று லட்சதீப பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று, மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு லட்சதீப பெருவிழா நடந்தது. விழாவையொட்டி மூலவர் அம்மனுக்கு மஹா விஸ்வரூப பூப்பந்தல் அமைக்கப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரமும், மஹா தீபாராதனையும், உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் பரம்பரை தர்மகர்த்தா மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.