நகரி: திருமலையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 3 கோடி ரூபாய் வசூலானது. திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், 10 நாட்களாக நடந்து வந்த பிரம்மோற்சவ விழா, கடந்த ஞாயிறு நிறைவடைந்தது. பிரமோற்சவ விழாவில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழா நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 3 கோடி ரூபாய் வசூல் ஆனது. சாதாரண நாளில், இவ்வளவு தொகை வசூலானது, இதுவே முதல் முறை என, தேவஸ்தான பொக்கிஷங்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.