பதிவு செய்த நாள்
13
ஏப்
2024
04:04
தக்கலை; தக்கலை பார்த்தசாரதி கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கடந்த 9ம் தேதி துவங்கிய கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறைவடைகிறது. முதல் நாள் (9ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை , தீபாராதனை , மாலை௫ மணிக்கு சுதர்சன ஹோமம் நடந்தது. 2ம் நாள் கணபதி ஹோமம், தில ஹோமம், சாயூக்ய பூஜை , தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் மாலை 5 மணிக்கு ஆசாரியவரணம், 6.30க்கு தீபா ராதனை, தொடர்ந்து பக்தி இன்னிசை நடந்தது. ௩ம் நாள் ராதா கல்யாணம், அன்னதானம், பிரம்ம கலசபூஜை , அதிவாசஹோமம், அதிவாச பூஜை , 6 மணிக்கு சிறப்பு இன்னிசை , தீபாராதனை நடந்தது. 4ம் நாளான நேற்று (12ம் தே தி) காலை 6 மணிக்கு உஷ பூஜை , பிம்ப எழுந்தருளல், பிரதிஷ்டை, கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9.30 மணி முதல் 10.20 க்குள் மஹா கும்பாபிஷேகம் மற்றும்அலங்கார பூஜை , தீபாராதனை நடந்தது. விழாவில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனை ராணி கவுரி லக்ஷ்மி பாய் தம்புராட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ‘பார்த்த சாரதி ப ஜனாமிருதம்’ புத்தக வெளியீடு, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 க்கு மாபெரும் திருவிளக்கு பூஜை மற்றும் இரவு 7.30 க்கு திருவிளக்கு பூஜையில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. 5ம் நாளான இன்று (13ம் தேதி) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை பாகவத பாராயணம், மாலை 4 மணி முதல் 6.30 வரை ‘ கீதையின் நாயகன்’ எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, இரவு ௭மணிக்கு பரதநாட்டியம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு கிருஷ்ணன் வக சமுதாயப் பேரவை நிர்வாகிகள் மற்றும் பார்த்தசாரதி ஆலயநிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.