வெற்றிலை அலங்காரத்தில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2024 02:04
காரைக்கால்; காரைக்காலில் மகா மாரியம்மன் கோவிலில் வெற்றிலை அலங்காரத்தில் மகாமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் நகரில் கடைதெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் 44ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு திருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் விழா துவக்கியது. விழாவின் 7ம் நாள் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு நேற்று வெற்றிலை அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.