சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. கிரிவலம் சென்று வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 09:04
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். கிரிவலம்; நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் செல்ல துவங்கினர். கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே, அமைக்கப்பட்ட பந்தலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள், ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.