பதிவு செய்த நாள்
24
ஏப்
2024
07:04
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று. இதை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் குல்வந்த் ஹாலும் ஹாலில் பிரதானமாக காணப்படும் சாய்பாபாவின் மகா சமாதியும் பல்வேறு விதமான மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை சாய் பஞ்சமிர்த கீர்த்தனைகள் இயற்றப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றம் மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த கர்நாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி கீர்த்தனைகளை இசைத்தனர்.
* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.
* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.
* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.
"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு, எவரையும் வெறுக்காதே – இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
சிறப்பான எதிர்காலம் காத்திருக்கு நம்பிக்கை தருகிறார் சாய்பாபா :
* நேரத்தை வீணாக்காமல் கடமையை செய். சிறப்பான எதிர்காலம் அமையும்.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதை கேட்பது தியானம்.
* சொல்வது எளிது. அதன்படி நடப்பது கடினம்.
* பணம் இல்லாதவன் ஏழை அல்ல. பேராசை உள்ளவனே உண்மையான ஏழை.
* உன்னிடம் உள்ள குற்றத்தை கவனி. பிறரிடம் உள்ள நல்ல குணத்தைப்பார்.
* ஆன்மிக சிந்தனை வளர வளர பிரச்னைகள் தேய ஆரம்பிக்கும்.
* பணம் இல்லாவிட்டாலும் நல்ல மனம் இருந்தால்கூட பிறருக்கு உதவலாம்.
* ஆயிரம் அறிவுரைகளை வழங்குவதை விட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடு.
* உலகமே ஒரு பெரிய பல்கலைக்கழகம். அதில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியரே.
* உணவை வீணாக்காதே. அன்னதானம் செய்த புண்ணியத்தை பெறுவாய்.