மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 08:04
கோயம்புத்தூர்; சித்ரா பௌர்ணமி தினத்தில் கோயம்புத்தூர் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்கிழமை சித்திரா பௌர்ணமியையொட்டி, மதுக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு சித்ரா பௌர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். மலையில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபட்டனர்.
வெள்ளிங்கிரி மலையில் புனித யாத்திரையின் போது 8 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, பக்தர்கள் எச்சரிக்கையுடன் மலையேற வேண்டும் என வனத்துறையினர் திங்கள்கிழமை அறிவுறுத்தல் விடுத்திருந்தது. மலையடிவாரத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் பார்க்கிங் வசதியும், மலை உச்சிக்கு செல்லும் படிகள் மற்றும் யாத்திரை பாதையை சுற்றி தண்ணீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கோயிலில் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இரவு 8 மணி வரை கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.