மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா; நாளை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2024 03:04
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவில் கோர்ட்டார் மண்டகப்படியில் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் நாளை திருவிழா நிறைவு பெறுகிறது.
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த மானாமதுரை கிராமத்தார்கள் மண்டகப்படியில் நடைபெறும் பக்தி உலாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கருட வாகனத்தில் வீதி உலா சென்று தசாவதார நிகழ்ச்சிக்காக கோர்ட்டார் மண்டகப்படிக்கு வந்தடைந்தார். அங்கு ராமர், கிருஷ்ணர், மச்ச அவதாரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். மானாமதுரை கோர்ட்டிலிருந்து நீதிபதிகள் வக்கீல்கள் அலுவலக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமான வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நாளை 27ம் தேதி சந்தன காப்பு உற்சவ சாந்தியுடன் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன்,அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி உள்ளிட்ட பல செய்திருந்தனர்.