பந்தலூர் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 10:04
பந்தலூர்; பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 34 ஆம் ஆண்டு தேர் திருவிழா மகா கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை, காப்பு கட்டுதல், பிரசாதம் வழங்குதல், மகா சக்தி காளியம்மன் ஆலயத்தில் நீர் எடுத்து கரகம் பாலித்து அம்மனை புஷ்ப கரகத்தில் அம்மன் ஆலயம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மறுநாள் சிறப்பு பூஜைகளும் மகாசக்தி காளியம்மன் ஆலயத்தில் இருந்து அக்னி சட்டி, பால்குடம், காவடி ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலத்தில் பங்கு ஏற்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை தேர் ஊர்வலம் நடந்ததுடன், மாவிளக்கு பூஜை, சிறப்பு பூஜை மற்றும் அம்மன் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஒரு பொதுமக்கள் செய்திருந்தனர்.