திருவதிகை ரங்கநாதர் கோவிலில் ராமர் பட்டாபிஷேக நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 05:04
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாதர் கோவிலில் ராமர்பட்டாபிஷேக உற்சவ நிறைவு விழா நடந்தது. கோவிலில், கடந்த 17ம் தேதி விழா துவங்கியது. நேற்று (28ம் தேதி) ராமர் பட்டாபிஷக நிறைவு விழா நடந்தது. அதையொட்டி, காலை 7:00 மணிக்கு விஸ்வரூபத ரிசனம், 9:00 மணிக்கு உற்சவர் ராமர், லட்சுமணர், சீதா, அனுமன், மூலவர், உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை , மாலை 6:00 மணிக்கு உற்சவர் ராமர் லட்சுமண, சீதா அனுமன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.