Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஷியாமா ... மூவுலக அரசி அம்மன் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு மூவுலக அரசி அம்மன் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் கொடிமரம் சீரமைப்பு பணி ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் கொடிமரம் சீரமைப்பு பணி ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்

07 மே
2024
01:05

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில்.

இங்கு, 2007ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 16 ஆண்டுகள் கழித்து 2024ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, சென்னையைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவர் மூலம் 25.80 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடத்த உத்தரவிட்டதை அடுத்து, 2023 ஜூலை மாதம் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதில், கோவில் கொடிமரத்தின் மீது உள்ள செப்பு கவசங்களை அகற்றி, உபயதாரர் செலவில் தங்க நீர் தோய்த்து மீண்டும் பொருத்தும் பணிக்காக, நேற்று கவசம் அகற்றும் பணி துவங்க இருந்தது. இதையடுத்து, கொடிமர செப்பு கவசத்தை அகற்றி, 230 கிராம் தங்கத்தில் செய்கூலி, சேதாரம், கச்சா பொருட்கள் உட்பட அனைத்து பணிகளும் 19.55 லட்சத்தில் மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத்துறையினர் உத்தரவிட்டனர். இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கருணாநிதி மற்றும் நகை ஆய்வாளர் ஜம்குமார், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று கொடிமரத்திற்கு பூஜை போடப்பட்டது. அப்போது, கொடிமர செப்பு கவசங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வந்த, ஸ்தபதிகளிடம் அதிகாரி மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து கேட்டனர். இதிற்கு பதிலளித்த ஸ்தபதிகள், செப்பு கவசங்களை கழற்றி, சுத்தம் செய்து கெமிக்கல் பவுடரால் முலாம் பூசப்படும் என, மட்டும் தெரிவித்தனர். தங்கத்தை பயன்படுத்தாமல், கெமிக்கல் பவுடர் மூலம் தான் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து, 230 கிராம் தங்கத்தால் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ள நிலையில், நீங்கள் கெமிக்கல் மட்டும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளீர்கள். எனவே, பணிகளை நிறுத்துங்கள் என, நகை ஆய்வாளர் மற்றும் துணை ஆணையர் உத்தரவிட்டனர். ஹிந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, அதன்பின் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொடிமர செப்பு கவசம் சீரமைப்பு பணி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar