பதிவு செய்த நாள்
08
மே
2024
04:05
போத்தனூர்; மேட்டூரிலுள்ள மாகாளியம்மன் கோவில சித்திரை திருவிழா முன்னிட்டு, சக்தி கரக ஊர்வலம் நடந்தது.
போத்தனூர் அடுத்து மேட்டூரில் உள்ள மாகாளியம்மன் கோவில். சித்திரை திருவிழா கடந்த, 30ல் கணபதி ஹோமம், கொடியேற்றம், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இரண்டாம் நாள் முதல், 6ம் தேதி வரை கம்பம் சுற்றி ஆடுதல், பூஜை நடந்தன. நேற்று அம்மனின் ஆபரணங்கள் கொண்டு வருதல், அம்மன் திருக்கல்யாணம், மூரண்டம்மன் கோவிலிலிருந்து கரகம் முத்தரித்து அழைத்து வர புறப்படுதல் நடந்தன. இன்று அதிகாலை சாமி கரகம், பூவோடு, முளைப்பாரியுடன் சாமி அலங்கார ஊர்வலம் மூரண்டம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் உச்சிக்கால பூஜை, அடி விழுந்து கும்பிடுதல், உள்ளிட்டவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர். நாளை இரவு சப்பர தேரில் மாகாளியம்மன் சக்தி கரகத்துடன் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.