பாட்னா சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி; பக்தர்களுக்கு சேவை செய்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 11:05
பாட்னா: பாட்னா சாகிப் குருத்வாராவில், பக்தர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். காலை உணவு தயார் செய்யும் சமையல் அறைக்கு சென்று, பிரதமர் மோடி சப்பாத்தி தயார் செய்தார். புகழ்பெற்ற சீக்கியர்களின் புனிதத் தலமான ஸ்ரீ தக்த் ஹர்மந்திர் பாட்னா சாஹிப் குருத்வாரா. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு 10வது சீக்கிய குரு பிறந்த இடத்தில் பாட்னா சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங்கின் பிறப்பிடத்தைக் குறிக்கும் வகையில் 19 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் தக்த்தின் கட்டுமானம் நியமிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் செய்ய இன்று (மே 13) பீஹாருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். பாட்னா சாகிப் குருத்வாராவில், பக்தர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். காலை உணவு தயார் செய்யும் சமையல் அறைக்கு சென்று, பிரதமர் மோடி சப்பாத்தி தயார் செய்தார். பிரதமர் மோடி உணவு பரிமாறி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு, பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.