Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாட்னா சாஹிப் குருத்வாராவில் ... திருத்தேரி அம்மச்சார் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா திருத்தேரி அம்மச்சார் அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

13 மே
2024
11:05

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோவில். கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. உற்சவர் பிரகலாத வரதராக வீற்றிருக்கின்றார். ஆண்டாள் நாச்சியார், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகளுக்கு என, தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் முக்கிய உற்சவமாக, வைகாசி பிரம்மோற்சவம் 10 நாட்களும், அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவமும் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து, நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இன்று காலை கொடியேற்றத்துடன் இவ்விழா துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மே 27ம் தேதி வரை, தினமும் உற்சவங்கள் நடக்கின்றன. விழாவின் முக்கிய உற்சவங்களாக, 15ம் தேதி காலை கருடசேவை; 17ம் தேதி யாளி வாகன உற்சவம்; 18ம் தேதி மாலை யானை வாகனம் உற்சவம் உள்ளிட்டவை, வாணவேடிக்கையுடன் நடைபெற உள்ளது. பின், 19ம் தேதி காலை, முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. 21ம் தேதி தீர்த்தவாரி பல்லக்கு உற்சவம் உள்ளிட்டவை வரிசையாக நடைபெற உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar