பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்
சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் செல்வாக்கும் நிறைந்திருக்கும். புகழும் பெருமையும் இணைந்திருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் மாதமாக இருக்கும். ராசிநாதனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பணவரவில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை உயரும். பொன்னும், பொருளும் சேரும். ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிப்பதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் விருப்பம் நிறைவேறும். குழந்தை பாக்கியம், திருமண யோகம், சொத்து சேர்க்கை என்பதெல்லாம் உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் செவ்வாய் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடம் தீரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். தொழில்காரகன் சனி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணியில் சங்கடங்கள் தோன்றும் என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்குண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். பெண்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களின் மேற்கல்விக்கனவு வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 27
அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28, ஜூன் 1, 6, 10
பரிகாரம்: சூரியனை வழிபட வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
ரோகிணி; மனக்காரகனான சந்திரன், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, மன உறுதியும், திட்டமிட்டு செயல்படும் ஆற்றலும் இருக்கும். வைகாசி மாதம் உங்கள் வளமிக்க மாதமாக இருக்கப் போகிறது. லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் தைரியமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்திலும், உங்கள் வாழ்விலும் நன்மை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். தம்பதியருக்குள் இருந்த சங்கடம் விலகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும். உடலில் அசதி ஏற்பட்டாலும் உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு முயற்சி யோகத்தை உண்டாக்கும். பெண்களுக்கு வழக்கத்தை விட யோக மாதமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பிள்ளைகளால் நன்மை காண முடியும். விவசாயிகளுக்கு நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மே 27, 28
அதிர்ஷ்ட நாள்: மே 15, 20, 24, 29, ஜூன் 2, 6, 11
பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1,2 ம் பாதம்; செவ்வாய், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு பக்கம் துணிச்சல், தைரியம், வேகம் இருந்தாலும், மறு பக்கம் விவேகமும் இருக்கும். எதிர் விளைவு பற்றி அறிந்து செயல்படுவீர்கள். வைகாசி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வருவாய் வரும். சொத்து சேரும். விருப்பம் நிறைவேறும். வழக்குகளில் சாதகமான நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலையில் பதட்டம் இருக்கும். எந்த வேலையை எப்போது செய்வது என்ற முடிவிற்கு வரமுடியாமல் திணறுவீர்கள். குரு பார்வையால் முயற்சி வெற்றியாகும். குலதெய்வ அருள் உண்டாகும். மேற்கல்வி முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அதன் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தின் காரணமாக பயணங்கள் தோன்றும் என்றாலும் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவருடன் இணக்கமான சூழல் ஏற்படும். சுயதொழில் செய்யும் பெண்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர். அரசியல்வாதிகள் நிலை உயரும். விவசாயிகள் எண்ணம் பூர்த்தியாகும். பொருளாதார நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மே 29.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27, ஜூன் 6, 9.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சங்கடம் விலகும்.