பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் மாதமாக அமையும். விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் உங்களுக்கு யோகத்தை தரும். உடல்நிலையில் முன்னேற்றம், உறவுகளால் ஆதாயம், வியாபாரம், தொழிலில் வளர்ச்சி, போட்டியாளர்கள் விலகும் நிலை, செல்வாக்கு, புகழ் மீண்டும் தோன்றும் வாய்ப்பு உண்டாகும். இதுவரையில் தடைபட்ட முயற்சி வெற்றி பெறும். பணம் பலவழிகளிலும் வரும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்கள், சிறு தொழில் செய்வோர் நிலை உயரும். சனி, பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விருப்பம் நிறைவேறும். தெய்வ அருள் உண்டாகும். உடல் பாதிப்பு விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சி வெற்றியளிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மே 29.
அதிர்ஷ்ட நாள்: மே 14,18,23,27, ஜூன் 5,9
பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
திருவாதிரை: ராகு, புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் என்பது தானே வரும். நினைத்ததை அடையும் யோகம் இயல்பாகவே இருக்கும். முன்னேற்றப் பாதையில் நடைபோடும் உங்களுக்கு வைகாசி யோகமான மாதமாக இருக்கும். சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில், வியாபாரத்தில் லாபத்தை வழங்கப் போகிறார். துணிச்சல், தைரியம் அதிகரிக்கும். எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதுடன் வழக்குகளிலும் வெற்றியை வழங்கப் போகிறார். மாதத்தின் பிற்பகுதியில் லாபாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணம் பலவழியிலும் வரும். விருப்பம் நிறைவேறும்.செல்வாக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசியல்வாதிகளுக்கு ஆதாய மாதமாக இருக்கும். தைரியமுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். அனைத்திலும் லாபமான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி யாவும் வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு புதிய வேலை அமையும். சுயதொழில் செய்வோர் லாபம் காண்பர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே, 30.
அதிர்ஷ்ட நாள்: மே. 14, 22, 23, 31. ஜூன், 4, 5, 13.
பரிகாரம்: பாலாம்பிகையை வழிபட வாழ்க்கை வளமாகும்.
புனர்பூசம் 1,2,3 ம் பாதம்; புதன், குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சாதுரியம், சாணக்கியத்தனம் பிறவிச்சொத்தாக இருக்கும். உங்கள் குறிக்கோளை அடையக் கூடியவர்கராக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் ஆதாயமானதாக அமையும். உங்கள் மூன்றாம் அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். ஆனால் அவை எல்லாம் ஆதாயம் தரக் கூடியதாக இருக்கும். புதிய சொத்து, வாகனம், நகை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு வரன் அமையும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி விலகும். பட்டம் பதவி பொறுப்பு தேடி வரும். அரசியல்வாதிகளின் எண்ணம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். மாதம் முழுவதும் சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். பெண்கள், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக இருப்பர். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணியில் இருந்த பிரச்னை விலகும். சிலருக்கு புதிய பொறுப்பு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். திறமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பணியாளர்கள் நிலை உயரும். மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 31.
அதிர்ஷ்ட நாள்: மே 14, 21, 23, 30. ஜூன் 3, 5, 12
பரிகாரம் மீனாட்சியம்மனை வழிபட வாழ்வு வளமாகும்.