பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் சாதிக்கும் வல்லமையும் கொண்ட உங்களுக்கு 6ல் சஞ்சரிக்கும் கேது அளப்பரிய ஆற்றல் வழங்குவார். தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரம் வெற்றியாகும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரனால் பொன் பொருள் சேரும். வரவு அதிகரிக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். நீண்ட நாளாக பேசிப் பார்த்து விலைக்கு வராத இடம் இந்த மாதம் வரும். பத்திரம் கையெழுத்தாகும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியின் பார்வைக்கு ஆளாவதால் செயல்கள் இழுபறியாகும். முயற்சி தள்ளிப்போகும் என்றாலும் விடா முயற்சியால் வெற்றியடைவீர்கள். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். மாணவர்களுக்கு மேற்கல்வி எண்ணம் நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி வரும்.
சந்திராஷ்டமம்: மே 24,25
அதிர்ஷ்ட நாள்: மே 16,18,27. ஜூன் 7, 9
பரிகாரம்: விநாயகரை வழிபாடு நன்மை தரும்.
பரணி
சுக்கிரன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எதிலும் திட்டமிட்டு செயல்படும் ஆற்றலும் நினைத்ததை அடையும் அதிர்ஷ்டமும் இயல்பாகவே இருக்கும். வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் மாதமாக இருக்கப் போகிறது. சுக்கிரன் மாதம் முழுவதும் யோகத்தை தரப் போகிறார். பொன்னும் பொருளும் சேரும். வரவு கூடும். குடும்பத்தில் நெருக்கடி மறையும். 2ல் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயர்வதுடன், உடல் பாதிப்புகள் விலகும். பணியில் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி தீரும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் நடத்துவோர் உயர்வு பெறுவர். தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பெண்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் பெறுவர். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். வேலை தேடுவோரின் முயற்சி வெற்றியாகும். சிலர் வெளிநாட்டிற்கும் செல்வர். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். விளைச்சல் பொருள் கூடுதல் விலை போகும். லாபச் சனியால் மூடிக்கிடந்த தொழில் மீண்டும் இயங்கும். உழைப்பவரின் விருப்பம் பூர்த்தியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்கள் விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம்: மே 25,26
அதிர்ஷ்ட நாள்: மே 15,18,24,27, ஜூன் 6,9
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் தீரும்.
கார்த்திகை 1 ம் பாதம்
சூரியன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், மற்றவருக்கு வழிகாட்டும் சக்தியும் இருக்கும். பிறக்கப் போகும் வைகாசி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் தன குடும்ப ஸ்தானத்தில் குரு பகவானுடன் இணைவதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். இதுவரை இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். அரசுத்தேர்வு எழுதியவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணியில் சந்தித்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். லாபச்சனியால் தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உண்டாகும். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி, தடைகள் விலகும். விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். பெண்களுக்கு இக்காலம் யோக காலமாக இருக்கும். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். மாணவர்களுக்கு மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 26
அதிர்ஷ்ட நாள்: மே 18, 19, 27, 28, ஜூன் 1, 9, 10
பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை அதிகரிக்கும்.