திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 03:05
மேலுார்; திருவாதவூர், திருமறைநாதர் , வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏப்.27 முகூர்த்தகால் ஊன்றப்பட்டு திருகல்யாண மண்டபத்தில் திருவிழா பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. இன்று(மே 13 ) கோயிலில் கொடியேற்றப்பட்டது. அதற்கு முன்பாக திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் மற்றும் பிரியாவிடையுடன் கோயிலை சுற்றி வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. பிறகு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இவ் விழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அறங்காவலர் சீனிவாசன், இணை ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ் விழாவில் திருவாதவூர், மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர்