ரியாசி கௌரி சங்கர் கோயிலுக்கு சாலை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 05:05
ரியாசி: ஜம்மு காஷ்மீர், ரியாசியில் உள்ள இந்து கோவிலுக்கு சாலை அமைக்க முஸ்லிம்கள் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
ரியாசி மாவட்டத்தில் உள்ள கேரல் பஞ்சாயத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் ஆண்கள், 500 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலுக்கு சாலை அமைப்பதற்காக தங்கள் நிலத்தில் நான்கு கானல்களை நன்கொடையாக அளித்துள்ளனர். ரியாசி கௌரி சங்கர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் செல்ல சரியான பாதை இல்லை. கேரல் பஞ்சாயத்தைச் சேர்ந்த குலாம் ரசூல் மற்றும் குலாம் முகமது ஆகியோர் சாலை அமைப்பதற்காக நான்கு கானல் நிலத்தை வழங்கியுள்ளது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக உள்ளது.
ரியாசி மாவட்ட ஆணையர் விஷேஷ் பால் மஹாஜன் கூறுகையில்; கேரல் பஞ்சாயத்தைச் சேர்ந்த குலாம் ரசூல் மற்றும் குலாம் முகமது ஆகியோர் சாலை அமைப்பதற்காக நான்கு கானல் நிலத்தை வழங்கியுள்ளனர். நிலத்தின் மதிப்பீடு ரூ1 கோடிக்கு மேல் இருக்கும். மேலும் கோயிலுக்கு சாலை அமைப்பதற்கான நிதியை நிர்வாகம் வழங்கும். கோயிலுக்கு செல்ல 10 அடி அகலத்துக்கு 1200 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.