வைகாசி மாத பிறப்பு; ராஜகோபாலசுவாமி கோயிலில் கோ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 11:05
திருநெல்வேலி; வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயிலில் கோ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலனை பெறுகிறார்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க நாளான இன்று பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு கோயிலில் கோ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.