பதிவு செய்த நாள்
14
மே
2024
01:05
சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை (மே 14) திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி நடை திறந்து விளக்கேற்றுகிறார்; வேறு பூஜைகள் இல்லை. இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெறும். கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை நடத்தப்பட்டு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை, அத்தாழ பூஜைக்கு பின், இரவு 7:30 மணிக்கு அடைக்கப்படும். மே, 19 இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.