திருத்தணி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 01:05
திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். நேற்று காலை 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவு அடைந்தது. இதில், ஐந்து பக்தர்கள் அக்னி குண்டத்தில் தவறி விழுந்து லோசான தீக்காயத்துடன் தப்பினார். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.